January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொருளாதாரத்தை சீரமைக்க அரசு தற்காலிகமான நடவடிக்கைகளை மாத்திரம்தான் எடுத்துள்ளது’

மோசமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையின்மை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டியூட் ஒப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சார்பில், பிரதீக்ஸா 2030 என்ற தலைப்பில் பொருளாதாரக் கருத்தரங்கு நடைபெற்ற போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தியிருந்தனர்.

கேரள மாநிலத்தை மேம்படுத்துவதற்கான கருத்துக்களை பெறுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இதில் பேசிய மன்மோகன் சிங்;

2016 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் வேலையின்மை , அமைப்புசாரா துறை சீர்குலைந்து உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க அரசு தற்காலிகமான நடவடிக்கைகளைத்தான் எடுத்துள்ளது.இதனால் பல துறை சார்ந்தோருக்கு கடன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைக்கு அடித்தளமாக இருப்பது கூட்டாட்சியும்,மாநில அரசுகளின் தொடர் ஆலோசனையும் தான்.ஆனால், தற்போதைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில் இந்த அம்சங்களை நான் காணவில்லை.

எதிர்கால பட்ஜெட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாமல் கேரளா மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதால்,பெரிய கடன் சுமையில் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.