January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசி செலுத்தினார் நடிகர் கமல்ஹாசன்

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் திகதி தொடங்கிய நிலையில்,அது குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடி ,தமிழக ஆளுநர் ஆகியோர் தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டதனை அடுத்து கட்சித் தலைவர்களும் ,அதிகாரிகளும் தற்போது கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட கமல்ஹாசன்,தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

அத்துடன்,’உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் தயாராகிவிடுங்கள்’ என இரட்டை அர்த்தத்திலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.