January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பா.ஜ.க.வை தமிழக மக்கள் வெளியேற்ற வேண்டும்’

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரு வரலாறு எனப் பேசும் பாஜகவை தமிழக மக்கள் வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி பா.ஜ.க.வை வெளியேற்றி தமிழக மக்கள் தேசத்துக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

ஒரு தேசம்,ஒரு கலாசாரம்,ஒரு வரலாறு எனப் பேசும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் வெளியேற்ற வேண்டும் என பேசியுள்ளார்.

தமிழக வரலாற்றில் இதுவரை,தமிழக மக்களைத் தவிர வேறு எவரும் ஆளவில்லை எனக் கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தத் தேர்தலிலும் இதை உணர்த்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் .

தமிழக மக்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்தான் தமிழக முதல்வராக வர வேண்டும் என நாகர்கோவிலில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடிபணிந்து நடக்கும் ஒருவர் தமிழக மக்களுக்கு முதல்வராக இருக்க முடியாது.

ஒரு தேசம்,ஒரு வரலாறு என பிரதமர் பேசுவதாகவும் அப்படியானால் தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா? தமிழ்க் கலாசாரம் இந்திய கலாசாரத்தில் இல்லையா?

மோடி என்ன சொல்கிறாரோ அதைச் செய்யக்கூடிய முதல்வர்தான் உங்களுக்கு கிடைத்திருக்கிறார் ,மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதல்வராக இல்லை என ராகுல் காந்தி தமிழக முதல்வரை விமர்சனம் செய்துள்ளார்.