இலங்கை காங்கேசன்துறை,இந்தியாவின் காரைக்கால் இடையேயான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பிறகு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இந்த்ஸ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் இந்த பயணிகள் கப்பல் சேவைக்காண புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டிருக்கிறது.
சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திலீப்குமார் குப்தா,இந்த்ஸ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் நிரஞ்சன் நந்தகோபனும் இந்த கப்பல் போக்குவரத்து திட்டத்தில் கைச்சாத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சுமுகமாக தொடங்கியதும் ,இந்த கப்பல் போக்குவரத்து சேவை விரைந்து ஆரம்பிக்கப்படும் என நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்திருக்கிறார்
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து தொடங்கவுள்ளதை அடுத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் பாஜக மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்.
அதில் இந்த போக்குவரத்து திட்டத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார்.