தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 21 தொகுதிகளை வழங்குவதற்கு அதிமுக இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுக – பாஜகவிற்கு இடையில் தொகுதிப் பங்கீடு குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி கோவை திருச்சி வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்ற 60 தொகுதிகளின் பட்டியலை பாஜக முன்வைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிகமான தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.