கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள பள்ளி மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்.
ராகுல் காந்தி மேடையில் நடனம் ஆடிய அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் நடனமாட முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளார் .
அப்போது நடனம் ஆட முடியும் என உறுதி அளித்த ராகுல் காந்தி நண்பர்கள் சிலரையும் மேடைக்கு அழைத்திருக்கிறார்.
#WATCH: Congress leader Rahul Gandhi dances with students of St. Joseph's Matriculation Hr. Sec. School in Mulagumoodubn, Tamil Nadu during an interaction with them pic.twitter.com/RaSDpuXTqQ
— ANI (@ANI) March 1, 2021
அங்கிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரையே ராகுல் நடனமாட அழைத்திருக்கிறார்
மிகுந்த கரகோஷத்துக்கு மத்தியில் தனது வயதான காலத்திலும் ராகுலின் கோரிக்கைக்கிணங்க நடனமாடினார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு, 3 மாணவிகள், ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி மற்றும் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர்.
மாணவிகளின் நடனத்துக்கும் அசைவுக்கும் ஏற்றவாறு ராகுல் காந்தியும் இணைந்து நடனம் ஆடியுள்ள இந்த காணொளி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 06ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.