July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

Photo :Twitter/@narendramodi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாக பணியாற்றினார்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியாவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி முதல் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், நீண்டகால நோய்கள் உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 உயர்ந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,157 ஆக பதிவாகியுள்ளது.