July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டமன்றத்தேர்தல்: தேர்தல் ஆணையர்

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான திகதிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

அதற்கமைய தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுவதுடன் தமிழகம் – 234, புதுவை – 30, கேரளம் – 140, மேற்குவங்கம் – 294, அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேநேரம் மார்ச் 12ஆம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் திகதி கடைசி நாளாகும். 20ஆம் திகதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் 22 ஆம் திகதியாகும்.

இதேவேளை அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே 24ஆம் திகதியுடன் முடிவடைவதுடன் தமிழ்நாட்டுக்கு மட்டும் இரு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும்  மே 2ஆம் திகதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.