இந்தியாவின் பதான்கோட், ஊரி புல்வாமா ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டு இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் நாகராஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா.வில் ஒரு கூட்டத்தில் இந்திய தூதர் பேசுகையில்; வேறு நாடுகளில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் மீது தற்காப்புக்காக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளுக்கும் உரிமை உள்ளது என கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை பற்றி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனவும்,அதுமட்டுமல்லாது அவர்கள் ஆதரவளித்து வருவதும் கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறிப்பிட்டு மெக்சிக்கோ ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் இந்திய தூதர் நாகராஜ் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.