புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுலாகியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார் .
புதுச்சேரியில் ஆளும் அரசு கலைக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது .
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் ராஜி னாமா செய்ததையடுத்து அங்கு ஆளுநரும் மாற்றப்பட்டார்.
இதனையடுத்து பெரும்பான்மை இழந்ததால் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்த நிலையில் அதிகாரபூர்வமாக குடியரசு தலைவர் ஆட்சி அமுல் படுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.