(Photo:@LGov_Puducherry/Twitter)
2016 இல் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. தற்போது புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றதாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக மோடி இன்று புதுச்சேரி விஜயம் செய்துள்ளார். இதேநேரம் புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, அரசு கட்டடங்களைத் திறந்துவைத்த பின் உரையாற்றினார்.
இதன்போது ‘புதுச்சேரி மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர். புதுச்சேரி மண், பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கியிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகளால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சருக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி வந்த ராகுல்காந்தி மீன்வளத்துக்கு தனி அமைச்சசகம் இல்லை என்று பொய் கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சகத்தை அமைத்து செயலாற்றி வருகிறது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பின்போது பாராமுகமாக இருந்து வந்தது காங்கிரஸ் அரசு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாணவர்களுக்கு கல்விதான் முக்கியம் என்பதை, ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒறுவருக்கு மாடல்ல’ என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம் என்பதைச் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
Furthering ‘Ease of Living’ for the people of Puducherry. https://t.co/SoKCmRNiN5
— Narendra Modi (@narendramodi) February 25, 2021