June 16, 2025 17:48:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது; பிரதமர் மோடி தமிழில் டுவிட்

தமிழகம் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்ற அதேவேளை,பாண்டிச்சேரியிலும் அங்கு நடைபெறும் நிகழ்விலும் கலந்துகொள்ள இருக்கிறார்..

தமிழகத்தில் கோயம்புத்தூரிலும் புதுச்சேரியிலும் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் தமிழகம் வர இருக்கிறார் .இதனால் புதுச்சேரியில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக வருகையை ஒட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில்,தமிழகத்தை புகழ்ந்து சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

’தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது எனவும் தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ்பெற்றது எனவும் புகழ்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுகிறது என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.