லகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இந்திய குடியரசுத் தலைவர் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
இந்த மைதானத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி நதிக்கரையை அண்மித்து கடந்த 1982ம் ஆண்டு சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.
இதுவே கடந்த 2015ம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த “நரேந்திர மோடி” மைதானத்தில் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு பயிற்சிக்காக தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளன.
நீச்சல் குளம், 4 ஓய்வு அரைகள், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை இதன் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டுள்ளன.
மைதானத்தில் நிழல் விழாதவாறு மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.
இதனிடைய இந்த மைதானத்தில் இன்று முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி உலகின் மிகப் பெரிய மைதானத்தில் முதன்முதலாக நடைபெற உள்ளது.