(FilePhoto)
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் உள்ளிட்ட ஐந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் இராஜினாமா செய்தனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தநிலையில், அங்கு காங்கிரஸ் கூட்டணியின் பலம் 13ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆகவும் இருந்தது.
இதையடுத்து, கடந்த 22ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதலமைச்சர் நாராயணசாமி இராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தும்படி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.