April 29, 2025 10:57:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி

கோயம்புத்தூரில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழகம் வருகை தர உள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற நிலையில் தற்போது மீண்டும் தமிழகம் வருகை தருவது சிறப்பு கவனத்தைப் பெற்றிருக்கிறது.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகை தர உள்ளார்.

பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர், மாலை நான்கு முப்பது மணி அளவில் கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

குறித்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி கோவையில் தமிழக பொலிஸார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக என அனைத்து தரப்பினரும் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.