July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆயுத உற்பத்தியில் நாடு தன்னிறைவை எட்ட நடவடிக்கை’

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை திறம்பட செயல்படுத்துவது குறித்த காணொலி கருத்தரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் .

அதில் ஆயுத தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அத்துடன் ஏற்றுமதி நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் முதல் மற்றும் இரண்டாம் உலக போரின் போது இந்தியாவில் இருந்து ஆயுதமும்,வெடிமருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதாக கூறிய பிரதமர், அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது என்றார். முன்பு பல ஆண்டுகளாக இந்தியா ஆயுத ஏற்றுமதியில் ஈடுபட்டது என்பதை நினைவுபடுத்தி இருக்கிறார்.

தற்போது 40 நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், வரும் காலத்தில் ஆயுத உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டும் என்றார்.

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இருப்பது பெருமைக்குரிய விடயம் அல்ல எனவும் , அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இப்போது 100 வகையான ஆயுத தளவாட இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்திருக்கிறார்.