அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயுத தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
அதிலும் மூன்று ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயுத தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயுத விற்பனையில் பெறப்படும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலைக் கொண்டு, பாதுகாப்புத்துறை சார்ந்த தொழிலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு துறை தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர் கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.