கடந்த சில நாட்களுக்கு முன்னர் போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் பல யூகங்கள் எழும்பின.நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வருமாறு அழைத்தாரா அல்லது அவரது உடல் நலம் பற்றி விசாரித்தாரா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பு பற்றி கமல்ஹாசன் பிரசாரப் பயணத்தின் போது பதில் அளித்திருக்கிறார் .
ரஜினியுடன் அரசியல் பேசவில்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிய நிலையில், அவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல என பிரசாரப் பயணத்தின் போது கமல்ஹாசன் கூறியுள்ளார்.