ஆந்திராவில் ஓடுபாதையில் இருந்து விலகிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கைகளில் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்திற்கு 64 பயணிகளுடன் அரபு நாட்டிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்துள்ளது.
தரையிறங்கும் போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி இறக்கை ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தின் வலதுபக்க இறக்கை, ஓடுபாதையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி சேதமடைந்துள்ளது .
இதில் மின் கம்பம் கீழே சாய்ந்த நிலையில், விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் 64 பேரும் எந்த பாதிப்புகளும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இறுதி நேர விபத்து குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.