நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார்
சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக ரஜினி கட்சி தொடங்காத நிலையில், ஆதரவு
கேட்பதாக கூறியிருந்தார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவுக்கு அழைப்பதற்காகவோ அல்லது அவரிடம் ஏதாவது ஆலோசனை பெறுவதற்காகவோ ரஜினிகாந்தை சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.