இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக 24 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள 24 நாடுகளின் வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகள் குழு ,இந்திய ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகள், பாகிஸ்தானால் தூண்டப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து இராணுவத்தினரிடம் கேட்டறிந்துள்ளனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை டிரோன் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லைதாண்டி வழங்குவதாக தூதரக அதிகாரிகளை சந்தித்த ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரகசிய சுரங்கப்பாதை அமைத்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதையும் ராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் விளக்கியுள்ளனர்.