May 15, 2025 22:26:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவை முறியடிக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’

பத்து ஆசிய நாடுளின் சுகாதார அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இங்கு பேசிய பிரதமர்,நாட்டின் எல்லைகளை கடந்து கொரோனாவை முறியடிக்க ஒன்றுகூடவேண்டும் என்று ஆசிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். .

இந்த அழைப்பை இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்றுள்ளன.கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தியதால், உலகில் மிகவும் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா போன்ற தொற்று நோய்களை ஆய்வு செய்ய அனைவரும் கூட்டாக இணைந்து ஒரு மையத்தை ஏற்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவர்களும், செவிலியர்களும் உலக அளவில் பயணிக்க சிறப்பு விசாவை ஏற்படுத்தலாம் என்று பிரதமர் மோடி இதன்போது யோசனை தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கிடையிலான தடையற்ற விமான ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கும்படியும் மோடி இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.