October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை ராணுவ தளபதி தொடங்கிவைத்தார்

குஜராத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வஜ்ரா பீரங்கிகளை இராணுவ தளபதி எம்.எம்.நரவானே தொடங்கி வைத்துள்ளார்.

50 டன் எடை கொண்ட இந்த பீரங்கிகள், 47 கிலோ எடை கொண்ட குண்டுகளை தாங்கவல்லது எனக் கூறப்படுகிறது.

இந்த பீரங்கிகள்,43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கக் கூடியவை.

100 கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை தயாரிப்பதற்கு , 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த பீரங்கிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் சூரத் , ஹாசிராவில் எல் அண்ட் டி டிஃபென்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆயுதத் தொழிற்சாலைக்கு சென்ற ராணுவத் தளபதி நரவானே, ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்காக பீரங்கிகளை திறந்து வைத்தார்.