நடிகர் அஜித்தை கோல் டெக்ஸி ஓட்டுனர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தவறுதலாக அழைத்துச்சென்றதையடுத்து அங்கு நின்ற சில ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளனர்.
சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் அஜித்குமார், அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், அவர் ரைபிள் கிளப்புக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து கோல் டெக்ஸி ஒன்றை முற்பதிவு செய்துள்ளார்.
இடத்தை தவறுதலாக புரிந்து கொண்ட கார் ஓட்டுநர் அஜித்தை புதிய சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது இடம் மாறி வந்திருப்பதை அஜித்துக்கு அங்கிருந்த காவலர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அதற்குள் அஜித்தை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் சில நிமிடங்கள் பேசியோதோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின்னர் ரைபிள் கிளப் பழைய ஆணையர் அலுவலகத்தில் இருப்பதையடுத்து அங்கு சென்றுள்ளார் தல அஜித்.
ஷார்ட் ஹேர்ஸ் டைல், கருப்பு டி-சேர்ட், கருப்பு தொப்பி என மாஸாக இருந்த அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
That Humbleness..💛🔥#Valimai pic.twitter.com/JJ5E7hmbY9
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 18, 2021