January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“லடாக்கில் இந்தியா-சீனா மோதலின் போது போர் அபாயம் ஏற்பட்டது”: தலைமை இராணுவ அதிகாரி 

(FilePhoto)

கடந்த ஆண்டு லடாக்கின் கைலாஷ் மலைப்பகுதிகளில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கு சூழல் ஏற்பட்டதாக மூத்த இராணுவ அதிகாரி யோகேஷ் குமார் ஜோஷி தெரிவித்துள்ளார்.

லடாக் தலைநகரான லே-யில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் பின்பு அந்தப்போர் கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில், பங்கோங் ஏரியின் தெற்குப் பகுதியில் உள்ள கைலாஷ் சிகரங்களை இந்திய இராணுவம் கைப்பற்றியதுடன் இராணுவ டாங்குகளையும் கொண்டு செல்லப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த சீன துருப்புகள் தங்களது டாங்குகளை கொண்டு வந்து போருக்கான முனைப்பில் இறங்கியதாக இராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறான சவாலான நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடித்ததால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது இந்தப் பகுதிகளில் இருந்து சீன இராணுவம் தனது துருப்புகளை அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.