
(Photo:RahulGandhi/Twitter)
என் தந்தையை கொன்றவர்களை நான் எப்போதோ மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு விஜயம் செய்த ராகுல், கல்லூரி மாணவிகளை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது என் தந்தையை கொன்றவர்கள் மீது எந்த கோபமும் இல்லை நான் அவர்களை மன்னித்து விட்டேன். இதற்கு முன்னரும் கூட பலமுறை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவும், அவர்களை விடுதலை செய்வதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அத்தோடு ”எனக்கு யார் மீதும் எந்த கோபமோ அல்லது வெறுப்போ இல்லை. நான் எனது தந்தையை இழந்து விட்டேன்.
அது எனக்கு மிகவும் கடினமான நேரம். எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது” எனவும் ராகுல்காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை எமது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும்.
என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை தமிழகத்தில் தமிழ் பேச அனுமதிப்பதில்லை. அரசை எதிர்த்து பேசினால், தீவிரவாதி என்கிறார்கள் எனவும் ராகுல் காந்தி இதன்போது தெரிவித்துள்ளார்.