அண்மைக்காலமாக இந்தியா புதிய நவீன ஆயுதங்களையும் போர்க் கருவிகளையும் உற்பத்தி செய்து வரும் நிலையில், புதிய வகை டிரோன் ஒன்றையும் தயாரித்துள்ளது.
இந்த புதிய வகை டிரோன் பரிசோதனை ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி கடந்தாண்டு ரஸ்தோம் – 2 என்ற டிரோனின் இறுதிக்கட்ட சோதனை 16 அடி உயரத்தில் நடைபெற்றது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து டிரோன்களை இந்தியா வாங்கி வரும் நிலையில்,உள்நாட்டு உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது டிரோன்களை வடிவமைக்கும் முயற்சியில் டி.ஆர்.டி.ஓ என்ற ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
அடுத்த கட்டமாக 18 மணி நேரம் இந்த ட்ரோன் இயக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பரிசோதனை கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.