புதுச்சேரி மாநிலத்தில் துணை ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகி உள்ளதால் தற்போது நாராயணசாமியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சம பலத்துடன் தற்போது அமைச்சரவையில் இருக்கின்றன.
இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திடீரென தற்போது ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார்.
வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இருந்தபோதிலும் பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.