
தென்னாபிரிக்க மற்றும் பிரேசிலில் பரவிவரும் வீரியமிக்க புதியரக கொரோனா வைரஸ் ரகங்கள் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வைரஸ் கடந்த மாதம் நால்வரிடம் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, பிரேசிலில் பரவிவரும் புதிய வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் இம்மாதம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் வைரஸூக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனை ஆராய்ந்து வருவதாகவும் இவை பிரிட்டனில் பரவிவரும் புதிய வைரஸிலிருந்து மாறுபட்டவை எனவும் சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த நாடுகளிலிருந்து வருபவர்களைக் கட்டாயமாக பி.சி.ஆர்சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவது குறித்து இந்திய அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
எனினும் தென்னாபிரிக்காவிலிருந்தும் பிரேசிலிருந்தும் இந்தியாவிற்கு நேரடி விமானச்சேவைகள் இல்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டனில் பரவிவரும் புதிய வைரஸை நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா ஏற்கனவே அந்நாட்டிலிருந்து வருபவர்களைக் கடுமையான பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றது.
இதேவேளை பிரிட்டனில் பரவிவரும் வீரியமிக்க புதியரக வைரஸினால் பாதிக்கப்பட்ட 187 பேர் இதுவரை இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.