January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் மத்திய பிரதேச பேருந்து விபத்தில் 45 பேர் பலி: 7 பேர் உயிர் தப்பினர்

Photo: Twitter/ Giridhari Yadav MP

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்த 45 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பயணிகள் கிராம மக்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த பேருந்தில் 54 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.