July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணையை பரிசோதிக்கவுள்ள இந்தியா

இந்தியாவின் தயாரிப்பில் உள்ள அஸ்த்ரா ஏவுகணை மணிக்கு 5,557 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக கூறப்படுகிறது.

வான் பரப்பில் இருந்து குறித்த இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, 160 கிலோ மீட்டர் தூர இலக்கை நோக்கி செல்லும் திறன் கொண்டது என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் பறந்து சென்று தாக்கும் அஸ்த்ரா ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.

அடுத்த ஆண்டு அஸ்த்ரா ஏவுகணையை விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது 100 கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் திறன் கொண்ட அஸ்த்ரா ஏவுகணையின் தாக்கும் திறன் 160 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படவுள்ளது .

இதற்கான பரிசோதனையை அடுத்த சில மாதங்களில் டி.ஆர்.டி.ஓ தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒலியை விட அதிக வேகத்தில் பாயும் இந்த அஸ்த்ரா ஏவுகணை இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டால் உலக நாடுகளுக்கு இது பெரும் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.