பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு டுவிட்டரில் எதிர்ப்பை வெளியிட்ட நடிகை ஓவியா மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மோடி சென்னை வருகை தந்த நிலையில் நடிகை ஓவியா #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஹேஷ்டேக்கை மட்டுமே பதிவிட்டிருந்த ஓவியா வேறு எதுவும் பதிவிடவில்லை .இதைப் பார்த்த பலரும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதில் வழங்கியிருந்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், இறையாண்மைக்கு எதிராகவும் நடிகை ஓவியா செயல்பட்டதாக கூறி தமிழக பாஜக ஐடி விங் சார்பில் சிபிசிஐடி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது.
இந்திய அளவில் #GoBackModi, #TnWelcomesmodi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.