January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்றாவது தடவையாகவும் ஒரே டெஸ்டில் 5 விக்கெட்டுக்களுடன் சதமடித்த அஷ்வின்

Photo: Twitter/ BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் அஷ்வினின் சதத்தால் இங்கிலாந்துக்கு 482 ஓட்டங்கள் என்ற இமய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எதிர் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அஷ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

அஷ்வின் ஒரே டெஸ்ட் போட்டியில், 5 விக்கெட்டுக்களைப் பெற்று சதமடித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகின்றது.

போட்டியின் மூன்றாவது நாள் நிறைவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்காக மேலும் 429 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் பந்துவீச்சில் சிக்கி, 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணி குறைந்த ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.