January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உரிய தருணத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

உரிய தருணத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்ததுடன் இது ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது நடைபெற்ற மசோதா மீதான விவாதத்தில், வளர்ச்சி என்ற பெயரில் போலியான வாக்குறுதிகள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அமித் ஷா,  காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல்சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்ப்பவர்கள் அங்குள்ள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீருக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் கட்சி  370 ஆவது பிரிவு நீக்கப்பட்டு கடந்த 17 மாதங்களில் பாஜக அரசு என்ன செய்தது என கேட்பது வினோதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய தருணத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அவர் கூறியுள்ளமை வரவேற்பை பெற்றிருக்கிறது.