
இந்தியா சார்பில் இதுவரை பல்வேறு நாடுகளுக்கு 2 கோடியே 29 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 64 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் விலையில்லாமல் உதவி செய்யும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
165 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் வர்த்தக ரீதியில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லத்தின் அமெரிக்கா,ஆபிரிக்கா,மற்றும் பசுபிக் தீவுகளிலுள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வரும் வாரங்களில் விநியோகிக்கப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு மருந்தை பெற பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியாவை அணுகி இருப்பது குறிப்பிடத்தக்கது.