November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இமயமலைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி

Photo:ANI

காஷ்மீரின் குல்மார்கில் ராணுவத்தின் அதி உயர் போர் பயிற்சி பள்ளி இருக்கிறது.இங்கு ராணுவ வீரர்களுக்கு இரு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனி மூடிய மலைப் பகுதிகளில் போரிடும் வகையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறப்பு உயர் பயிற்சி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

குளிர்கால போர்ப்பயிற்சி மற்றும் மலைப் போர்ப்பயிற்சி என ராணுவத்தினருக்கு இருவகையான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் இமயமலைப் பகுதியில் இருக்கும் பனிச் சிகரங்களில் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடும் குளிரையும் தாங்கி போரில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு இந்த பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 540 வீரர்களுக்கு பனிபடர்ந்த மலைப்பகுதியில் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக பனியை தாங்கும் தனித்துவமான ஆடைகள்,பனியில் சறுக்கி செல்ல உதவும் கருவிகள் மற்றும் பனிப்பொழிவை அறிய உதவும் கண்ணாடிகள் பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுகிறது .

இந்த பயிற்சியால் பனி படர்ந்த மலைச் சிகரங்களில் போர் புரியும் பக்குவத்தை இந்திய ராணுவ வீரர்கள் பெறுவார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.