January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லடாக்கின் பாங்கோங் ஏரிப்பகுதியிலிருந்து படைகளை விலக்கிக்கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் இணக்கம்

கொந்தளிப்பு மிகுந்த லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரிப்பகுதியிலிருந்து இந்தியாவும் சீனா படைகளை பின்னோக்கி நகர்த்துவதற்கு இணங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் பாங்கோங் ஏரிப்பகுதியிலிருந்து இரு நாடுகளும் தமது படையினரை விலக்கிக்கொள்வதற்கு இணங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் படை நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படையினரை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்து 48 மணித்தியாலத்தின் பின்னர் இருநாடுகளினதும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறிப்பிட்ட ஏரியின் வடக்கு கரையில் ரோந்து நடவடிக்கைகள் உட்பட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் இரு தரப்பும் இணங்கியுள்ளன.எனினும் இதன் மூலம் நிலப்பகுதி எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்கப்போவதில்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.