
அதிமுகவில் அடிமட்ட தொண்டராக இருப்பவர்கள் மட்டுமே இனிமேல் முதலமைச்சராக வர முடியும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், சசிகலா மற்றும் டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது உழைப்பால் உயர்ந்த கட்சி என தெரித்துள்ள முதலமைச்சர் தொண்டர்களால் ஆளப்படும் கட்சி என்பதால் ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது என தெரிவித்துள்ளார்.
மீண்டும் தனது நடவடிக்கைகளை டிடிவி தினகரன் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ள முதல்வர், அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாத அவர், 4 ஆண்டு காலம் அலைந்து திரிந்து பார்த்தும் எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்சியில் இடையில் இணைந்த அவர் சதி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.