இந்தியா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மற்றும் சென்னையில் உள்ள வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட விசாரணைகளில் திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக பொலிஸாரின் அவசர கட்டுப்பாட்டு என்னை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் “சேலம் மற்றும் சென்னையில் உள்ள முதலமைச்சரின் வீடுகளில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும்” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முதலமைச்சரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரின் இல்லங்களுக்குக் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்து அழைப்பு மேற்கொள்ளப்பட்ட எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த அழைப்பு திருப்பூரிலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டியில் முதலமைச்சர் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.