November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விமானப்படையை எதிர்கொள்ள எல்லையில் படைகளை குவிக்கும் சீனா

லடாக்கையொட்டி சீனா தன்னுடைய பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் சினூக் ரக ஹெலிகொப்டர்கள் இசுகோய் போர் விமானங்கள் மற்றும் பிரான்சிலிருந்து அண்மையில் வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவையே முக்கிய காரணங்களாகும்.

இந்த லடாக் எல்லை பிரச்சினையானது ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதில் சீனா தான் அத்துமீறி உள்ளே நுழைந்து இருக்கிறது என்பது உலக நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சிலகாலம் சமாதானப் போக்கை கடைப்பிடிக்கும் சீனா,திடீரென்று படைகளை குவிக்கும். பின் திரும்பவும் சமாதானத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை அதிக அளவில் விமான எதிர்ப்பு பீரங்கி களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் குவித்து வைத்திருக்கிறது.

மேலும் அதிகப்படியான படை வீரர்களையும் எல்லையில் நீண்ட காலம் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் மாற்றத்துக்குப் பிறகு சீனா திடீரென்று எல்லைப்பகுதியில் இத்தகைய முன்னேற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சீனா ஒன்றை மறந்துவிட்டு இத்தகைய செயல்களை செய்கிறது. அது என்னவெனில் மோடியின் ஆளுமையும் ஒரு செயலில் அவரின் தீவிர தன்மையையும் சீனத் தலைமை சரியாக புரிந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் என்னவெனில் பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி மற்றும் தற்போது உள்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை என்று எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எதிர்க்கட்சிகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தன்னுடைய தாய் இயக்கமான ஆர்எஸ்எஸ் அல்லது தனது கட்சியான பிஜேபியையோ பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு சரி என்று பட்டதை தயவு இல்லாமல் செய்து முடிக்கும் பிரதமராக மோடி இருக்கிறார்.

ஆகையால் முந்தைய பிரதமர்களை போல இவர் அமைதியாக இருக்க மாட்டார் என்பதை சீனத் தலைமை சரியாக புரிந்துகொண்டால் இந்தியாவிடம் தனது ஆட்டத்தை அது காட்டாது.

ஏனென்றால் இது தைவான் அல்ல மோடியின் புதிய ஆற்றல் மிக்க அதிரடியான இந்தியா என்பதை அவ்வப்போது அவர் நினைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது .