May 24, 2025 18:17:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவை மறைமுகமாக தாக்கி பேசிய தமிழக முதலமைச்சர்

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதி திட்டம் தீட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர் ,சதி திட்டங்களை தூள்தூளாக உடைப்போம் என்று மறைமுக தாக்குதல் நடத்தியுள்ளார்.

10 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இல்லாத டி.டி.வி.தினகரன் கட்சியை கைப்பற்ற நினைப்பதாக பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் .

மேலும் டி.டி.வி தினகரனை நம்பி போனால் நடுரோட்டில்தான் நிற்கவேண்டும் என விமர்சித்துள்ள முதலமைச்சர், அவரை நம்பிச் சென்ற 18 எம்.எல்.ஏக்கள் இன்று நடுரோட்டில் நிற்பதாக கூறியுள்ளார்.