இந்தியா, உத்தரகாண்டில் பனிப்பாறை சரிந்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 200க்கும் மேற்ப்பட்டோர் காணமால் போயுள்ள நிலையில், 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் காணாமல் போயுள்ள 197 பேரை தேடும் பணி மற்றும் நிவாரண பணிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ் வெள்ளப் பெருக்கில் பெதபோவன் பகுதியில் ரிசிகங்கா நீர் மின் நிலையம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 35 பேரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அத்தோடு, தவுளிகங்கா, அல்கானந்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, 13 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.