
சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தன்னிடம் விசாரித்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போதே, டி.டி.வி.தினகரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக தினகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
சசிகலா தான் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் ஜெயலலிதா நினைவிடம் திறந்த பிறகு சசிகலா அங்கு செல்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர் ,வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.