
பெங்களூரில் இருந்து நேற்று புறப்பட்ட சசிகலா, இன்று காலை சென்னையை வந்தடைந்தார்.
23 மணி நேர பயணத்திற்கு பின்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம் வந்தடைந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறைவடைந்து ஜனவரி 27 -ம் திகதி விடுதலையான சசிகலா, நேற்று பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து தமிழகம் புறப்பட்டார்.
இதன்போது தமிழக எல்லையில் இருந்து அவரின் ஆதரவாளர்கள் வீதிகளில் கூடி நின்று வரவேற்பளித்தனர்.
இன்று காலை சென்னையை வந்தடைந்த அவர் ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.