கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிருந்தவர்கள் கொளுத்திய பட்டாசால் தீப்பற்றி இரு கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாகி இன்று பெங்களூரிலிருந்து தமிழகம் செல்லும் சசிகலாவிற்கு 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்தவகையில் தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலா கார் வந்த உடன் அவரை வரவேற்க தொண்டர்கள் முண்டியடித்து சென்றதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அத்தோடு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வரவேற்க நின்றிருந்தவர்கள் பட்டாசுகளை காரின் அருகே வைத்து கொளுத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஒரு காரில் தீரப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதுடன் அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியுள்ளது.
காருக்குள் பட்டாசுகள் இருந்ததால் தீப்பொறி கார் முழுக்க பரவியது. தீயை அணைக்க ஆளில்லாமல் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதேவேளை சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடிக்க கிருஷ்ணகிரி பொலிஸார் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2 cars of @ammkofficial catches fire because of cracker burst, when supporters of #Sasikala welcomed her near #Krishnagiri town#TNwelcomesசின்னம்மா #Sasikala #AIADMK @RKRadhakrishn @savukku @Ahmedshabbir20 pic.twitter.com/JwJWf4jvp0
— Sachin Kumar (@KSachin999) February 8, 2021