November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு காரில் சசிகலா பயணம்

தனது காரில் பொருத்தியிருந்த அதிமுக கொடியை காவல்துறையினர் அகற்றிய நிலையில் சசிகலா அதேபோன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் தனது பயணத்தை தொடர்கிறார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என தமிழக பொலிஸாரிடம் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் கொடியை பயன்படுத்த பல்வேறு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது .

அதிமுக கொடி பயன்படுத்திய காரில் பெங்களூருவில் இருந்து கிளம்பிய சசி சசிகலா கிருஷ்ணகிரி எல்லையைத் தாண்டிய போது அவருக்கு அந்த கொடியை அகற்ற கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து காரில் இருந்த கொடி நீக்ககப்பட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா தமிழக எல்லைக்கு வந்தத போது வேறு ஒரு காரில் பயணம் செய்துள்ளார் .

ஆனாலும் தமிழகத்திற்குள் வரும் காரிலும் அதிமுக கொடி பறப்பதாகவே கூறப்படுகிறது, நோட்டிஸ் வழங்கியும் அவர் பயணிக்கும் காரில் கொடி அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி இல்லை என்பதையும் கடந்த தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது .ஆகவே அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை என்பதே தற்போது அமைச்சர்களின் வாதமாக இருக்கிறது.

தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

இதேவேளை தமிழக எல்லையான ஜுஜுவாடி வந்தநிலையில் சசிகலாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் தமிழகம் வரும் வழியெங்கும் ஏராளமான மக்கள் திரண்டு சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதாக கூறப்பட்டாலும், சிறைவாசம் முடிந்து வரும் சசிகலா எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே அதிகளவு மக்கள் கூடியுள்ளனர் என விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது .

தமிழகத்திற்குள் வந்த சிசகலா ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டை கழுத்தில் போட்டவாறு சாமி தரிசனம் செய்துள்ளது தற்போது எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது.

டிடிவி தினகரனின், அமமுக வழக்கறிஞர்கள் குழு சார்பாக இந்த வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சேதப்படுத்திய கன்னட அமைப்புகள்

இன்னிலையில் சசிகலா பெங்களூரில் தங்கியிருந்த விடுதியின் அருகில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்புகள் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

இதற்கு பதிலளித்துள்ள போராட்டக்காரர்கள் சசிகலா சிறைக்கு வெளியே வந்து இங்கு தங்கியிருந்தார், ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லும் போதும் தமிழில் பேனர்கள் இங்கே வைப்பது தவறு எனக் கூறி அதனை தீயிட்டு கொளுத்தியதாக கூறியுள்ளனர்.