இந்தியாவின் உத்தரகாண்ட் – சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளன .மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால் பல கட்டிடங்களும் நீர் மின் அமைப்புகளும் பல்வேறு பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிவேகத்தில் வந்த வெள்ளத்தால் அணை உடைந்ததில் ரிசிகங்கா நீர் மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த பனி சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 க்கு மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரையோரப் பகுதிகளான ஜோசிமத்,சமோலி உள்ளிட்ட பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர்,இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவப் பிரிவு, பொறியியல் பிரிவு அடங்கிய ராணுவக் குழுவினர் 600 பேர் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாளங்கள் திடீரென சரிந்துள்ளன.
இதனால் பனிப்பாளங்கள் உருகித் தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனினும் நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கரையோரப் பகுதி மக்கள் என நூறு முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்க விமானப்படையின் ஹெலிகப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையப் பகுதியில் 10 உடல்களைக் கண்டெடுத்துள்ளதாக இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட தபோவன் பகுதியை முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்துள்ளார்.