July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பனிப்பாறை சரிவால் திடீர் வெள்ளப்பெருக்கு : 150 பேரை காணவில்லை!

இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தின் தபோவன் பகுதியில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அலக்நந்தா ஆற்றில் உள்ள ரிஷி கங்கா அணையைச் சேதப்படுத்தியதுடன் திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது ரிஷி கங்கா மின் திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த குறைந்தது 150 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 50 தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/LalmaniVerma838/status/1358299969367625731?s=19

 

கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

இதற்கமைய டெல்லியிலிருந்து 200க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகண்ட் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளில் துரிதப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் மோடி, இந்த பேரிடர் தொடர்பில் அவதானித்து வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.