January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘7 பேர் விடுதலையில் தனக்கு அதிகாரமில்லை என்பது இவ்வளவு காலமும் ஆளுநருக்கு தெரியாதா?’

7 பேர் விடுதலையில் முடிவெடுக்க சொல்லி உச்சநீதிமன்றம் கூறிய பிறகு,திடீரென்று ஆளுநர் தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய சீமான்,தான் முதல்வரை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து கோரிக்கை வைத்ததாகவும் அப்போது முதல்வர் தான் ஆளுநரை சந்தித்து பேசும் பொழுது அவர் காத்திருங்கள்,காத்திருங்கள் என்று கூறி வருகிறார் என்று ஆளுநர் முதல்வரிடம் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்சமயம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு,ஆளுநர் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதிக்கே அதிகாரம் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இது தமிழக மக்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.

தனக்கு அதிகாரமில்லை என்பது இவ்வளவு காலமும் ஆளுநருக்கு தெரியாதா?,திட்டமிட்டு காலம் தாழ்த்தி வஞ்சித்து ஏமாற்றி விட்டார்கள். இனி அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.