photo: facebook/MK Stalin
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, திமுக மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி இருந்தது.
தற்போது இதற்கு பதிலளித்துள்ள மு க ஸ்டாலின், நாளைக்கே 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றால், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் வரத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுகளுக்குள் தூக்குத் தண்டனையை ரத்து செய்த தி.மு.க.வைப் பார்த்து, நாடகம் போடுகிறது என முதலமைச்சர் எவ்வாறு கூறலாம் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ReplyReply allForward
|